தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் பண்ணையாளரும்,பணக்காரர்களும்,மட்டுமே ஆட்சியிலும் அதிகாரத்திலும், இருந்தனர்.இந்த நிலை மாறவும்,ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற இடிமுழக்கத்துடன்திராவிட இயக்கத்தை தொடங்கினார். பேரறிஞர் அண்ணா.ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டார்.அவரை அடுத்து வந்த கருணாநிதியிடம் ஏழைகளை பற்றி எழுத்தும், பேச்சும் மட்டுமே இருந்தது. ஆனால்?,ஏழைகளுக்கு ஏற்றமில்லை, குடும்ப வளர்ச்சியில் மட்டுமே மகிழ்ச்சி கண்டார்.இவரையடுத்து வந்த மக்கள் தலைவர் எம்ஜிஆர், ஏழைகளின் வாழ்வில் ஒளி விளக்காய் திகழ்ந்தார்.ஏழைகளோடு ஏழைகளாய் ஏழைகளின் கண்ணீரை துடைக்க அயராது பாடு பட்டார். அவர் மறைவுக்கு அடுத்து வந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா ஏழை எளியோர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்.குறிப்பாக அம்மா உணவகம், அன்னதான திட்டம்,மூலம் ஏழை எளியோர்கள் பசி,பட்டினியை போக்கினார்கள். அம்மாவின் ஆட்சியில் ஏழைகளுக்கு இலவசம் என்ற சொல்லை நீக்கி, விலையில்லா திட்டங்கள் மூலம் எளியோர்களுக்கு ஏராளமான உதவிகளை வாரி வழங்கினார்கள்.அதனால் அ.தி.மு.க அரசு ஏழைகளுக்கான அரசு என பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இயற்கையும்,இறைவனும் அம்மாவை அழைத்துக் கொண்டனர்.செய்வதறியாது திகைத்து போனார்கள் ஏழை மக்கள். திக்கட்டவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதுபோல் ஏழைகளை காக்க எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஆட்சி பொறுப்பேற்ற எடப்பாடியார் அரசியல் வாரிசுக்கு இடம் தராமல் ஏழைகள் ஏற்றம் பெற அயராது உழைத்து வருகிறார்.
எடப்பாடியார் அரசு ஏழைகளுக்கான அரசு. எப்போதும் நாட்டு வளர்ச்சியை பற்றி சிந்திப்பதில் உறுதியாக இருந்து வருகிறார். ஏழைமக்களுக்கு எல்லா வசதியும், வாய்ப்பும் ஏற்படுத்த எடப்பாடியார் முழு முயற்ச்சி எடுத்து வருகிறார்.
ஏழைகளின் ஏற்றமே எனது உயிர் மூச்சு என பாடுபட்டு வருகிறார்.ஏழையின் தலைவர் எடப்பாடியார்.
இத்தனை ஆண்டு வரலாற்றில் சட்டம் ஒழுங்கு,நீதி,நிதி நிர்வாகத்தில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்து மத்திய அரசு அறிவித்தது,இதன் மூலம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்களின் புகழ் உச்சத்தை தொட்டது. இதனால் ஊரெங்கும் ஒரே பேச்சு ஏழையின் தலைவர் எடப்பாடியார் ஆட்சி.பற்றியே,,,,
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதாக அறிஞர் அண்ணா சொன்னார். அண்ணா சொல்லிய சொல்லை ஏழையின் தலைவர் எடப்பாடியார் என்றும் மறந்ததில்லை…
பாரதிராஜா
ஆசிரியர்
அம்மா அரசு நாளிதழ்