கூடலுார் : கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக, கோழிகள், அதன் தீவனங்கள், நீலகிரி வழியாக செல்ல, கால்நடை பராமரிப்பு துறை தடை விதித்துள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில், 'பறவை காய்ச்சல்' ஏற்பட்டு, ஏராளமான கோழிகள் இறந்துள்ளன. இதைத் தொடர்ந்து, கேரளாவில் இருந்து கோழி மற்றும் தீவனங்கள், நீலகிரி மாவட்டத்துக்குள் வருவதற்கு, கால்நடை பராமரிப்பு துறை தடை விதித்துள்ளது.தமிழக - கேரளா எல்லையை ஒட்டிய, எட்டு சோதனை சாவடிகளில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், அனைத்து வாகனங்களின் டயர்களுக்கும் கிருமி நாசினி தெளித்த பின், அனுமதி வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும்,
கேரள எல்லையில், முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றார்.கள்
சேலம் பாரதிராஜா