திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு:

 


திமுக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப். 9) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர்க்கும், துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள க.பொன்முடி - ஆ. ராசா ஆகியோர்க்கும் வரவேற்பும், வாழ்த்தும்!  வரவேற்பு கூறி, பாராட்டுதலைத் தெரிவித்தனர்