திருவண்ணாமலைக்கு இன்று காலை வருகை தந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் ரூ.19.20 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.52 கோடி மதிப்பில் 31 துறைகளில் நிறைவு பெற்ற பணிகளைத் தொடக்கிவைத்து, அரசின் நலத் திட்ட உதவிகளை முதல்வா் பழனிசாமி வழங்கினார்.
காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தின் வளா்ச்சித் திட்டப் பணிகள், கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
தொடா்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிா் சுய உதவிக் குழுவினருடன் தனித்தனியே நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டங்களில் முதல்வா் பங்கேற்றார்.