டெல்லி: ‘
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்வதற்கு, அவை கடன் வாங்குவதற்கு உறுதிமொழிக் கடிதம் அளிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அந்தக் கடிதம், வெற்று வார்த்தைகளால் நிரம்பிய காகிதம்; அதற்கு மதிப்பேதும் இல்லை. மாநிலங்களுக்குத் தேவை பணமே தவிர, மத்திய அரசின் உறுதிமொழிக் கடிதம் அல்ல. மத்திய அரசால் மட்டுமே பல்வேறு வழிகளில் நிதியாதாரத்தை திரட்டி மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவையை வழங்க முடியும்.ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் மாநிலங்களை கடன் வாங்குவதற்கு கட்டாயப்படுத்தினால், அவற்றின் மூலதனச் செலவு குறைவதை தவிர்க்க முடியாது என்று அந்தப் பதிவுகளில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது அளித்த வாக்குறுதியின்படி வருவாய் இழப்பை சந்திக்கும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை ப.சிதம்பரம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறார்