கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மகளை 2 லட்ச ரூபாய்க்கு விற்ற கொடூரம்..!






உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், கடும் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்த ஒருவர், கடனை திருப்பிச் செலுத்துவதற்காக தனது மகளை விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் மீரட் நகரின் பார்த்தாபூர் பகுதியில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தை தன்னை கடன் வாங்கிய நபருக்கு ரூ 2 லட்சத்திற்கு விற்றதாக குற்றம் சாட்டினார்.இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் தனது தாயுடன் காவல்துறை கண்காணிப்பாளரை அணுகி இது தொடர்பாக புகார் அளிக்க, விஷயம் வெளியே கசிந்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியும் தனது மகளை துன்புறுத்தி விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, கணவர் தன்னை இரும்பு கம்பியால் அடித்ததாகக் குற்றம் சாட்டினார்.காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் குடும்பம் பார்த்தாபூரின் சதாப்திநகர் பகுதியில் வசித்து வந்தது. லாரி ஓட்டுநரான குற்றம் சாட்டப்பட்டவர் பல கிரிமினல் வழக்குகளில் சிக்கி திகார் மற்றும் தஸ்னா சிறையில் இருந்துள்ளார்.இந்நிலையில் பராத் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து தனது கணவர் ரூ 2 லட்சம் கடன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி தெரிவித்தார். அவர் அந்த தொகையை செலுத்தத் தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகளை அந்த நபருக்கு விற்றுள்ளார்.இதற்கிடையில், கடனளித்தவர் விற்பனை செய்யப்பட்ட பெண்ணை ஒரு வருடம் பணயக்கைதியாக வைத்திருந்த பின்னர், அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார்.சில நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண், தப்பி ஓடி, தனது தாயின் உதவியுடன் போலீஸைத் தொடர்பு கொண்டார். இந்நிலையில் மீரட் எஸ்.பி. ராமர்ஜ் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சி..பிரம்பூரிக்கு உத்தரவிட்டுள்ளார்